உலக செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார் - பால் பண்ணையை பார்வையிட்டார் + "||" + Chief-Minister Edappadi Palanisamy went to New York - visited the dairy farm

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார் - பால் பண்ணையை பார்வையிட்டார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார் - பால் பண்ணையை பார்வையிட்டார்
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நியூயார்க் சென்றார். அங்குள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.
நியூயார்க்,

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் ஆகஸ்டு 28-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் விமானம் மூலம் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.


இங்கிலாந்து பயணத்திட்டத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நேற்று காலை அமெரிக்காவின் மாகாணமான நியூயார்க்கை சென்றடைந்தார். நியூயார்க்கில் பல்வேறு கூட்டங்களில் அவர் பங்கேற்றார்.

அங்குள்ள தொழில் அதிபர்கள் மற்றும் தமிழக தொழில் முனைவோர் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் அந்த மாகாணத்தில் உள்ள பப்பல்லோ என்ற பெரிய நகரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.

அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், கால்நடை பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் விஜயகுமார், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு, பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
2. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3. கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் இழப்பவர்களுக்கான நிதி உதவியை, ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
4. எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிப்பு: “மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. கொரோனா தடுப்புக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தடுப்புக்கு பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.