உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: சவுதி பட்டத்து இளவரசருடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு + "||" + Pakistan PM Imran Khan, Saudi Crown Prince discuss Kashmir on call

காஷ்மீர் விவகாரம்: சவுதி பட்டத்து இளவரசருடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு

காஷ்மீர் விவகாரம்:  சவுதி பட்டத்து இளவரசருடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு
சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசினார்.
இஸ்லமாபாத், 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இப்பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல முயன்று தோற்றுப்போனது. இருப்பினும், தொடர்ந்து, தனது நட்பு நாடான சீனா  உள்ளிட்ட நாடுகளிடம் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில்,  காஷ்மீர் விவகாரம் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி இது குறித்த  செய்தியை வெளியிட்டுள்ளது.  அந்தச் செய்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இன்று தொலைபேசியில் பேசி இருக்கிறார். காஷ்மீர் தொடர்பாக சவுதி இளவரசர் முகமது சல்மானிடம் இம்ரான்கான் தொலைபேசியில் பேசி இருப்பது இது நான்காவது முறையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
2. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை கடந்தது
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு தற்போது 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
3. பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவுக்கு பலி
பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகினர்.
4. பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
5. பாகிஸ்தானில் பயங்கரம்: 100 பேருடன் பறந்த விமானம் விபத்தில் சிக்கியது
பாகிஸ்தானில் 100 பேருடன் பறந்த விமானம் விபத்துக்குள்ளானது. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.