உலக செய்திகள்

பிரிட்டன்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன் + "||" + UK PM Boris Johnson Loses Majority As MP Joins Liberal Democrats

பிரிட்டன்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்  பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.
லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி  பிலிப் லீ, லிபரல் டெமக்கிராட்சு கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம்
மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒருவர் அதிகபட்சம் 2 துப்பாக்கிதான் வைத்திருக்க முடியும்.
2. நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு; சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
3. நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல்
நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
4. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
5. நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது - அறக்கட்டளையில் இருந்து காங். தலைவர் நீக்கம்
நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது. அதன் அறக்கட்டளையில் இருந்து காங்கிரஸ் தலைவர் நீக்கப்பட்டார்.