ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 4:07 AM GMT (Updated: 4 Sep 2019 4:21 AM GMT)

ரஷ்யாவுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டுஅதிபர் புதினை சந்தித்தார்.

விலாடிவோஸ்டோ, 

ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 2 நட்கள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினை மோடி சந்தித்தார்.  விலாடிவோஸ்டோக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன் பிரதமர் மோடி சென்றார். கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். 

நாளை (வியாழக்கிழமை) காலையில் பிரதமர் மோடி சில இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, நாளையே அவர் இந்தியாவுக்கு புறப்படுகிறார்.


Next Story