உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்; முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்


உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்; முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
x
தினத்தந்தி 4 Sep 2019 5:42 AM GMT (Updated: 4 Sep 2019 5:42 AM GMT)

முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ், பாகிஸ்தானை உலகின் மிகவும் ஆபத்தான நாடு என கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும், அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினருமான ஜேம்ஸ் மாட்டிஸ், பாகிஸ்தானை 'மிகவும் ஆபத்தான நாடு' என்று கருதுவதாக கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சிறந்த அமெரிக்க கடற்படை தளபதியாகவும், அமெரிக்க மத்திய  ஆணைய தலைவராகவும் பின்னர் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த மாட்டிஸ், பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவுடன் நீண்டகால அனுபவம் பெற்றவர். இதைதொடர்ந்து அவர் எழுதிய 'குழப்பத்தின் அடையாள அழைப்பு' என்ற சுயசரிதை செவ்வாயன்று வெளியாகியுள்ளது. 

அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது :-

”இந்தியா மீது பாகிஸ்தான் கொண்டுள்ள ஆவேசம், பாகிஸ்தான் இந்தியா மீது கொண்டுள்ள விரோதத்தையும், புவிசார் அரசியலையும் காட்டுகிறது. நான் கையாண்ட அனைத்து நாடுகளையும் விட, பாகிஸ்தான் மிகவும் ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். மேலும், அணு ஆயுதங்களை கையகப்படுத்துவதில் வேகமாக வளர்ந்து வரும் நாடான பாகிஸ்தானை, பயங்கரவாதிகளின் கைகளில் கொடுத்தால் பேரழிவு ஏற்படும். ” என கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய இம்ரான் கான் அரசாங்கத்தை பற்றி மறைமுகமாக கூறிய மாட்டிஸ், 'அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்ட தலைவர்கள் அவர்களிடம் இல்லை' என்று கூறியுள்ளார்

”அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளை அவநம்பிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான கதை. நாங்கள் பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும், ஆனால் எங்களின் கட்டுப்பாடுகள் மிகவும் கடினமானவை. மேலும், மே 2011-இல் ஒசாமா பின்லேடனை கண்டுபிடித்து கொலை செய்த அமெரிக்க கடற்படை தாக்குதலை பற்றி அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பாகிஸ்தானுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்பதற்கான காரணமும் இதுதான்” என கூறியுள்ளார்.

”தலிபான்களிடம், பாகிஸ்தானின் செல்வாக்கை பயன்படுத்தி, சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், அமெரிக்காவுடனான உறவை மீட்டமைக்கவும், அமெரிக்க வரலாற்றில் மிக நீளமான ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவரவும் ஜனாதிபதி டிரம்ப்  முயற்சிக்கிறார்” என கூறியுள்ளார்.

Next Story