இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷ்யா- பிரதமர் மோடி


இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷ்யா- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 Sept 2019 1:38 PM IST (Updated: 4 Sept 2019 1:38 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷ்யா என விலாடிவோஸ்டோக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மாஸ்கோ

ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினை மோடி சந்தித்தார்.  விலாடிவோஸ்டோக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன் பிரதமர் மோடி சென்றார். கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்

பிரதமர் மோடி விலாடிவோஸ்டோக் நகரில் பேசும் போது கூறியதாவது:-

இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷ்யா. இந்தியாவுடனான உறவில் ரஷ்யா  தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது.

ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது எனக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள், இது இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்பு உறவை நிரூபிக்கிறது. இது 1.3 பில்லியன் இந்தியர்களுக்கும் மரியாதைக்குரிய விஷயம் என கூறினார்.

Next Story