உலக செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல் - 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி + "||" + US Air Force air strikes in Iraq - 9 IS. Terrorists killed

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல் - 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல் - 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் உள்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 5 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.


* ஜப்பான் நாட்டின் முன்னாள் ராணி மிச்சிகோவுக்கு, மார்பக புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்.

* ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள நினேவே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* மாலி நாட்டில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் அந்த வழியாக வந்த பஸ் சிக்கியது. இந்த குண்டு வெடிப்பில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் 7 பேரை ஈரான் அரசு விடுதலை செய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈராக்கில் பரபரப்பு: அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவதளம் மீது பீரங்கி குண்டுகள் விழுந்தன: பின்னணி என்ன?
ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவதளம் மீது பீரங்கி குண்டுகள் விழுந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
3. ஈராக் நாட்டில் அமெரிக்க படைகளுக்கு கடும் எதிர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்
ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக் கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
4. அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு
மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
5. தாக்குதலுக்கு முன் ஈராக்கை வாய்மொழியாக எச்சரித்த ஈரான்
தாக்குதலுக்கு முன் ஈராக்கை ஈரான் வாய்மொழியாக எச்சரித்து உள்ளது.