உலக செய்திகள்

ஹாங்காங் போராட்டத்துக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் - நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவிப்பு + "||" + The controversial bill that caused the Hong Kong protest will be canceled - Executive Chairman Gary Lamm announces

ஹாங்காங் போராட்டத்துக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் - நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவிப்பு

ஹாங்காங் போராட்டத்துக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் - நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவிப்பு
ஹாங்காங் போராட்டத்துக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் என நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.
ஹாங்காங்,

ஹாங்காங்கில், குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் அங்கு போராட்டம் வெடித்தது.

அதனை தொடர்ந்து அந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மசோதாவை முழுமையாக கைவிடக்கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் ஹாங்காங்கில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால் ஹாங்காங்கில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.


இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய இருப்பதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். சீன அரசு நிர்வாகிகள் மற்றும் ஹாங்காங் எம்.பி.க்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு கேரி லாம் இந்த முடிவை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சை; மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் - டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை
பாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்க மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றதால் சர்ச்சை
இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
3. ஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக சர்ச்சை - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ்
ஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.