உலக செய்திகள்

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் காலமானார் + "||" + Zimbabwes former president Robert Mugabe dies in Singapore

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் காலமானார்

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் காலமானார்
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்.
சிங்கப்பூர்

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர்  ராபர்ட் முகாபே தனது 95 வயதில் இறந்துவிட்டார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.

"ஜிம்பாப்வேயின் நிறுவன தந்தையும் முன்னாள் அதிபருமான சி.டி. ராபர்ட் முகாபே காலமானதை மிகுந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் என அதிகாரப்பூர்வ அதிபர் எம்மர்சன் ட்விட்டரில் கூறப்பட்டு உள்ளது.

முகாபே சிங்கப்பூரில் இறந்தார், அங்கு அவர் சமீபத்தில் அடிக்கடி மருத்துவ  சிகிச்சை பெற்று வந்தார் என  இந்த விஷயத்தை நேரடியாக அறிந்த  ஆதாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறி உள்ளது.

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராகவும், இன நல்லிணக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக விளங்கினார். முகாபே, இறுதியில் நவம்பர் 2017 இல் தனது சொந்த ஆயுதப்படைகளால்  பதவியில் இருந்து தூக்கி எறியபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி
சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறையும், 15 பிரம்படியும் கொடுக்கப்பட்டது.
2. சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி, இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3. சிங்கப்பூரில் நிரவ் மோடி குடும்பத்தினர் வங்கி கணக்கு முடக்கம்
சிங்கப்பூரில் நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
4. தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: 162 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பு
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மாற்று விமானத்தில் 162 பயணிகள் 9 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
5. சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்
சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...