சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் நியமனம்


சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் நியமனம்
x
தினத்தந்தி 8 Sep 2019 3:06 AM GMT (Updated: 8 Sep 2019 3:06 AM GMT)

சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் அல் சாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கெய்ரோ,

சவுதி அரேபியா நாடு எண்ணெய் வளம் அதிகம் நிறைந்தது.  அந்நாட்டின் பெட்ரோலிய மற்றும் தாதுவளங்கள் அமைச்சராக உள்ள அல்-பலி என்பவரை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.  இதன்படி கடந்த செவ்வாய் கிழமை அவர் அந்நாட்டின் எண்ணெய் நிறுவனம் சவுதி அராம்கோவின் இயக்குனர்கள் வாரியத்தில் இருந்து முழுவதும் நீக்கப்பட்டார்.

ரஷ்ய-சவுதி அரேபிய வர்த்தகம், பொருளாதார மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான அரசு ஆணைய சந்திப்பில் ரஷ்ய ஆற்றல் அமைச்சர் அலெக்சாண்டர் நோவக்குடன் அல்-பலி பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆவார்.

இதனை தொடர்ந்து, அந்த பதவிக்கு சவுதி இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் அல் சாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  அவர், பதவி விலகும் மந்திரியிடம் இருந்து பொறுப்பினை ஏற்று கொள்கிறார்.

Next Story