ஜப்பானில் புயல் காரணமாக 200 விமானங்கள் ரத்து


ஜப்பானில் புயல் காரணமாக 200 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 8 Sep 2019 10:50 PM GMT (Updated: 8 Sep 2019 10:50 PM GMT)

ஜப்பானில் புயல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டோக்கியோ,

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியை நேற்று ‘பக்சாய்’ எனப்படும் புயல் தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த புயல் மற்றும் மழையால் அங்கு சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளன. இந்த புயலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் இல்லை. முன்னதாக இந்த புயலை முன்னிட்டு ஜப்பான் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக புயல் நகரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புயலை முன்னிட்டு ஜப்பானில் கணிசமான அளவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் 206 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதைப்போல ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டோக்கியோ, ஒசாகா இடையே 117 புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

Next Story