உலக செய்திகள்

பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல் + "||" + Jaish chief Masood Azhar secretly released from Pakistan jail: Intelligence report

பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்

பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்,

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, புல்வாமா தாக்குதல் வரை நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியவன் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்த நிலையில், கடுமையான சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் கைது செய்தது. 

இந்த நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுவதற்காக மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதேபோல், பிற பயங்கரவாத இயக்கங்களும் வெளிப்படையாக தங்களின் செயல்பாடுகளை துவங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எல்லையோர பகுதிகளான சைல்கோட் - ஜம்மு மற்றும் ராஜஸ்தானில் உள்ள செக்டார்களில் வரும் நாட்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் வகுத்து உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்து வருகிறது.  இந்த தகவல்களால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்- ஐநாவில் இந்தியா
பாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என பயங்கரவாத எதிர்ப்பு பதிவு தொடர்பாக ஐ.நா. அமைப்பில் இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டியது
2. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்
இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதனை சீன மீடியா மறுத்து உள்ளது.
3. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.
4. குல்பூஷண் ஜாதவ் வழக்கு : பாகிஸ்தான் அவசர சட்டம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு தொடர்பாக அவசர சட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.
5. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...