உலக செய்திகள்

அபிவிருத்தி திட்டங்களில் சீனா 1 பில்லியன் டாலர் முதலீடு; காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக்-சீனா ஆலோசனை + "||" + China reaffirms its full support to Pakistan;China plans to invest $1bn in Pakistan projects

அபிவிருத்தி திட்டங்களில் சீனா 1 பில்லியன் டாலர் முதலீடு; காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக்-சீனா ஆலோசனை

அபிவிருத்தி திட்டங்களில் சீனா 1 பில்லியன் டாலர் முதலீடு; காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக்-சீனா ஆலோசனை
பாகிஸ்தான் அபிவிருத்தி திட்டங்களில் சீனா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து உள்ளது. காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக்-சீனா ஆலோசனை நடத்தின.
இஸ்லாமாபாத்,

காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் ஆலோசனை நடத்தின. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் பெரிதாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தார். அவரது பயணம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், பாகிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சுதந்திரம் மற்றும் தேசிய கண்ணியத்தை பாதுகாக்க சீனா ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்துடன் தீர்த்து கொள்வது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, காஷ்மீரின் நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதில் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்து நிலைமையை மோசமாக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அபிவிருத்தி திட்டங்களில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பெய்ஜிங் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் யாவ் ஜிங் அறிவித்து இருந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத் மகளிர் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையில் (ஐ.டபிள்யூ.சி.சி.ஐ) உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்

இது தவிர, சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் (சிபிஇசி) கீழ் வளர்ச்சித் திட்டங்களின் வேகம் திருப்திகரமாக இருப்பதாகவும், சீனா-பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (சிபிஎஃப்டிஏ) இரண்டாம் கட்டம் அக்டோபரில் இறுதி செய்யப்படும் என்றும் அதன் பின்னர் 90 சதவீத பாகிஸ்தானியர்கள் விவசாய பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் உள்ளிட்ட ஏற்றுமதிகள் 0 சதவீத  வரியாகும்.

சந்தை அணுகல் பாகிஸ்தானின் ஏற்றுமதியை  500 மில்லியனாக அதிகரிக்கும், இது இருதரப்பு வர்த்தகத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
2. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்
இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்து பேச உள்ளார்.
4. சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் -ஈரான்
சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவுவெடுக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி தெரிவித்து உள்ளார்.
5. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.