மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் பலி


மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் பலி
x
தினத்தந்தி 9 Sep 2019 11:27 PM GMT (Updated: 9 Sep 2019 11:29 PM GMT)

மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


* மொராக்கோ நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* ஜப்பான் தலைநகர் டோக்கியோவை பக்சாய் புயல் தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார். மேலும் 36 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த புயலால் 9 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டனர்.

* இங்கிலாந்துக்கு சொந்தமான ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற சரக்கு கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜூலை மாதம் சிறை பிடித்தது. இந்த கப்பல் அடுத்த சில நாட்களுக்குள் விடுவிக்கப்படும் என்றும், அதற்கான சட்ட நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

* “பிரெக்ஸிட்”டை தாமதப்படுத்தும் நடவடிக்கைகளை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்துவருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.


Next Story