உலக செய்திகள்

ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை + "||" + Former first lady of Honduras sentenced to 58 years in jail

ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை

ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில்  நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை
ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய ஹோண்டுராஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டுராஸ்,

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர்  மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

52 வயதான பொனிலா அவரது கணவர் போர்ஃபிரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் பணத்திலிருந்து 7,79,000 டாலர் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பொனிலா இந்த பணத்தை நகைகள் வாங்கவும் மருத்துவமனையில் பணம் கட்டவும் தன்னுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காவும் பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்.

அவருடைய தரப்பு வழக்கறிஞர் அவர் நிரபராதி எனவும் மேல் முறையீடு செய்வோம் எனவும் வாதாடினார்.

பிப்ரவரி 2018ல் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார். ஏழை குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான பட்ஜெட் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பொனிலாவின் உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கும் போது பொனிலாவோ அவரது கணவரோ நீதிமன்றத்தில் இல்லை.

பொனிலா இந்த குடும்பத்தில் தண்டணை பெற்ற முதல் நபர் இல்லை. இதற்கு முன் போர்ஃபிரி ஒ லுபோவின் முதல் மகன் ஃபாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி
வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.
2. ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம்
ரஷ்யாவில் ஒரு ரூபாய் என்ற மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த ஐந்தே நிமிடங்களில் பெண்கள் கூட்டம் கடையை காலி செய்ததோடு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டனர்.
3. 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை பாட்டி
ஆந்திரவைச் சேர்ந்த 74 வயது பாட்டி, உலகின் மிக வயதான பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்து உள்ளார்.
4. உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
கலப்பட மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஸ்பெயினில் 17 ஆக அதிகரித்துள்ளது.
5. தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த வாலிபர்
வாலிபர் ஒருவர் தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.