தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!


தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
x
தினத்தந்தி 10 Sep 2019 1:16 PM GMT (Updated: 10 Sep 2019 1:16 PM GMT)

இங்கிலாந்தில் தொடர்ந்து 10 ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் இறுதியாக 11-வதுபெண் குழந்தையைப் பெற்ற சம்பவம் அந்த தம்பதியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதியினர் தொடர்ச்சியாக இதுவரை 10 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தற்போது 11-வது முறையாக அலெக்சிஸ் தாயாகி உள்ளார். இந்த முறை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு கேமரூன் என்று பெயரிட்டுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த 39 வயதான அலெக்சிஸ் பகுதிநேர உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டு பிறகு பின்னர் பெண் பிள்ளை ஒன்று தற்போது பிறந்துள்ளது. தமது 22 ஆம் வயதில் அலெக்சிஸ் முதன் முறையாக ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார். 

இரண்டாவதும் மூன்றாவதும் ஆண் பிள்ளைகள் பிறந்த நிலையில் தங்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என இந்த தம்பதி ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து 10 ஆண் பிள்ளைகள் பிறந்த பின்னரும் டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதிகளின் பெண் பிள்ளைக்கான ஆசை மட்டும் குறையவே இல்லை. இறுதியில் 11-வது முறையாக பிறந்த பிள்ளை பெண் குழந்தையாக பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அலெக்ஸிஸ் இந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது எனவும் மேலும் இத்துடன் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவடையும் எனவும் கூறியுள்ளார்.

தனக்கு மீண்டும் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறி விடுவார்களோ என்று அச்சம் அடைந்தேன். ஆனால் மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் அந்த வகையில் பதினோராவது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்றார். மேலும் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என்று கூறினார்.

Next Story