ஆப்கானிஸ்தான் ராணுவம் வான் தாக்குதல்: தலிபான் தலைவர் உள்பட 36 தீவிரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தான் ராணுவம் வான் தாக்குதல்: தலிபான் தலைவர் உள்பட 36 தீவிரவாதிகள் பலி
x

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் வழித்தாக்குதலில் தலிபான் தலைவர் உள்பட 36 தீவிரவாதிகள் பலியாகினர்.

பாக்லான்,

உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்னும் சில பகுதிகளில் தலிபான்கள் முழு அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், சிறப்பு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். 

தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை மீட்க, ராணுவம் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், பாக்லான் மற்றும் ஹெராத் பகுதிகளில் ஆப்கானிஸ்தான் இராணுவம்  வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா இட்ரஸ் மற்றும் தீவிரவாத அமைப்பின் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதற்கு முன்னதாக பாக்லான் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய இராணுவ தாக்குதலில் குறைந்தது 30 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தானின் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ இளம் வீரர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக தலிபானுடனான சமாதான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story