ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலி
x
தினத்தந்தி 10 Sep 2019 11:08 PM GMT (Updated: 10 Sep 2019 11:08 PM GMT)

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலியாயினர்.


* ரஷியா அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் இந்த மாத இறுதிக்குள் சந்தித்து பேசுவார்கள் என, ரஷியாவுக்கான புதிய சீனா தூதர் ஷாங் ஹன்குய் தெரிவித்துள்ளார்.

* அஜர்பைஜான் நாட்டின் இமிஷிலி மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* நெதர்லாந்தின் டார்ட்ரெச் என்ற நகரத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னர் அந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

* ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அந்நாட்டுடனான பொருளாதாரம் மற்றும் பரஸ்பர உறவுகளை பாதிக்கும் என்று ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.

* ஆப்கானிஸ்தானின் மைதான் வார்டாக் மாகாணத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீர்மனத்தை 2-வது முறையாக எம்.பி.க்கள் நிராகரித்தனர். இதையடுத்து நாடாளுமன்றம் உடனடியாக முடக்கப்பட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story