உலக செய்திகள்

இங்கிலாந்தில் ருசிகரம்: மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர் + "||" + England: A young man who washes clothes on a metro train

இங்கிலாந்தில் ருசிகரம்: மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்

இங்கிலாந்தில் ருசிகரம்: மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்
இங்கிலாந்தில் வாலிபர் ஒருவர் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்தனர்.

ரெயில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா, தான் கொண்டு வந்திருந்த வாளியில் தண்ணீரை ஊற்றி சோப்புப்பொடி போட்டு துணிகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித குழப்பத்துடனும் பார்த்தனர்.


அதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின் மென்சா, துணிகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர் சகஜமாக அமர்ந்து கொண்டார். எல்வின் மென்சாவின் இந்த செயல் பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகுதான் எல்வின் மென்சா, ‘பிராங்’ எனப்படும் டி.வி. நிகழ்ச்சிக்காக இப்படி செய்தது தெரியவந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று நடக்கிறது
இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது.
2. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5. கொரோனா சமூக தொற்றாக மாறுகிறதா இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டால், லீஸ்டர் போலவே லண்டனிலும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.