ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்


ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே  தாக்குதல்
x
தினத்தந்தி 11 Sep 2019 1:46 AM GMT (Updated: 11 Sep 2019 2:22 AM GMT)

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காபூல்,

அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தூதரக வளாகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள், பாதுகாப்பு படயினர் கொண்டு வந்தனர் தாக்குதல் நடைபெற்ற துதரகத்தில் அருகில் தான் நேட்டோ படையினரும் முகாமிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இந்த தாக்குதல் பற்றி எந்த கருத்தும் வெளியிடவில்லை.

அமெரிக்கா - தலீபான்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் நடக்கும் முதல் தாக்குதல் இதுவாகும்.


Next Story