உலக செய்திகள்

ஈராக்கின் புனிதத் தலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி + "||" + Iraq stampede kills 31 at Ashura commemorations in Karbala

ஈராக்கின் புனிதத் தலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

ஈராக்கின் புனிதத் தலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி
ஈராக்கில் புனிதத்தலத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
கர்பாலா

ஈராக்கில் உள்ள  கர்பாலா என்ற இடத்தில் கி.பி. 680-ல் ஷிடேஷ் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசி உரிமைக்காகக் போராடி உயிர் நீத்த இமாம் ஹுசைன் நினைவிடத்தில் ஆண்டுதோறும் சடங்குகள் நடைபெறுவது வழக்கம். 

ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான ஷியா முஸ்லீம் யாத்ரீகர்கள் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம் 10 ஆம் தேதி வரும் ஆஷூராவுக்காக கர்பாலாவுக்கு பயணம் செய்கிறார்கள். 

மற்றொரு பிரிவு இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டதில் 2004-ம் ஆண்டு 143 பேரும் 2005-ம் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 950 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டும் நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தில் மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். அதில், 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தான் நடைமேடை இடிந்ததாக சடங்குக்கு ஏற்பாடு செய்த புனிதத் தலத்தின் நிர்வாகிகளால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமேடை இடிந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல் - 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - ஆயுதக்குழுவை சேர்ந்த 3 வீரர்கள் பலி
ஈராக்கில் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 3 வீரர்கள் பலியாயினர்.
3. ஈராக்கில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி
ஈராக்கில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.
4. ஈராக்கில் வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகினர்.
5. ஈராக்கில் சிக்கி தவித்த பஞ்சாப் தொழிலாளர்கள் 7 பேர் நாடு திரும்பினர்
ஈராக்கில் சிக்கி தவித்த பஞ்சாப் தொழிலாளர்கள் 7 பேர் நாடு திரும்பினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...