உலக செய்திகள்

புதிய ஐபோன்களின் படையெடுப்பு; குறைந்தது முந்தைய ஐபோன்களின் விலை + "||" + Invasion of new iPhones At least the price of old iPhones

புதிய ஐபோன்களின் படையெடுப்பு; குறைந்தது முந்தைய ஐபோன்களின் விலை

புதிய ஐபோன்களின் படையெடுப்பு; குறைந்தது முந்தைய ஐபோன்களின் விலை
இந்தியாவில் புதிய ஐபோன்களின் அறிவிப்பால் முந்தைய ஐபோன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா,

அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபோன் அறிவிப்புகளுடன்,  முந்தைய வெளியீடான ஐபோன் எக்ஸ்.ஆர் , ஐபோன் 8 சீரிஸ் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

புதிய விலை குறைப்பு இந்தியாவிலும் அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் எக்ஸ்.ஆர். விலை குறைக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64 ஜி.பி. வெர்ஷன்களின் விலை ரூ. 20,000 குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 சீரிஸ் மாடலின் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஐபோன் எக்ஸ் சீரிஸ் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.