முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு


முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 8:44 AM GMT (Updated: 12 Sep 2019 10:15 AM GMT)

மனிதர்கள் வாழும் பூமி போன்ற வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு எக்ஸோபிளானட்டின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

வாஷிங்டன்,

சூரிய மண்டலத்திற்கு வெளியே கே 2-18 பி நட்சத்திரம் 2015 இல் கண்டுபிடிக்கப்பட்டது, கே 2-18 பி  என்பது "சூப்பர் எர்த்ஸ்" என்று அழைக்கப்படும் நட்சத்திரங்களின், நூற்றுக்கணக்கானவற்றில் இதுவும் ஒன்றாகும். இது நாசாவின் கெப்லர் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் எட்டு மடங்கு  எடை மற்றும் இரு மடங்கு பெரிய , கே 2-18 பி   என்ற  நட்சத்திரத்தில்  நீர் திரவ வடிவத்தில் இருக்க முடியும் என நேச்சர் ஆஸ்ட்ரானமி இதழில்  கூறப்பட்டு உள்ளது.

"பூமியைத் தவிர வேறு  கிரகங்களில்  உயிர்கள்  வாழக்கூடிய தண்ணீரைக் கண்டுபிடிப்பது என்பது  நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமானது" என்று யு.சி.எல் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் ஏஞ்சலோஸ் சியாராஸ் கூறி உள்ளார். "கே 2-18 பி பூமியின் 2.0' அல்ல"  பூமி தனித்துவமானது  என்று அவர் கூறினார். 

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தரவுகளுடன்  சியாராஸ் மற்றும் அவரது குழுவினர் திறந்த மூல வழிமுறைகளைப் பயன்படுத்தி "கே 2-18 பி"-ன் வளிமண்டலத்தின் மூலம் வடிகட்டப்பட்ட நட்சத்திர ஒளியை பகுப்பாய்வு செய்தனர்.

அவர்கள் நீர் நீராவியின் தெளிவற்ற அறிகுறியை கண்டுபிடித்தனர். கணினி மாடலிங் 0.1 முதல் 50 சதவிகிதம் வரை செறிவுகளை பரிந்துரைத்தது.

பூமியுடன் ஒப்பிடுகையில், பூமியின் வளிமண்டலத்தில் நீராவியின் சதவீதம் துருவங்களுக்கு மேலே 0.2 சதவீதத்திற்கும், வெப்பமண்டலத்தில் நான்கு சதவீதம் வரை வேறுபடுகிறது.

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கும் சான்றுகள் இருந்தன. நைட்ரஜன் மற்றும் மீத்தேன் கூட இருக்கலாம், ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்துடன் கண்டறிய முடியாத நிலையில் உள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

உயிர்களின் வாழ்க்கையின் அறிகுறிகளைத் தேடுவதில் "இந்த கிரகம் நம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள சிறந்த கிரகமாகும்" என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் வானியலாளரான இணை ஆசிரியர் ஜியோவானா டினெட்டி கூறி உள்ளார்.

இந்த கிரகத்தின்  மேற்பரப்பில் பெருங்கடல்களைக் கொண்டுள்ளது என்று நாம் கருத முடியாது, ஆனால் அதுவும் சாத்தியமாக கூடும். இன்றுவரை 4,000 க்கும் மேற்பட்ட எக்ஸோபிளானெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இது ஒரு பாறை மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை தண்ணீருடன் இணைப்பதில் முதன்மையானது என கூறப்படுகிறது.

வளிமண்டலங்களைக் கொண்ட பெரும்பாலான எக்ஸோபிளானெட்டுகள் மாபெரும் வாயு பந்துகள் மற்றும் தரவு கிடைக்கக்கூடிய சில பாறை கிரகங்களில்  எந்த வளிமண்டலமும் இல்லை என்று தெரிகிறது. 

வருங்கால விண்வெளி பயணங்கள் வரவிருக்கும் தசாப்தங்களில் இன்னும் நூற்றுக்கணக்கானவற்றைக் கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story