சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்


சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்
x
தினத்தந்தி 14 Sep 2019 6:07 AM GMT (Updated: 14 Sep 2019 9:19 AM GMT)

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

துபாய்,

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான  தாக்குதல்கள் நடைபெற்று உள்ளன.  இந்த தகவலை  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

புக்கியாக்கில் உள்ள சுத்திகரிப்பு  ஆலை மற்றும் குரைஸ் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து  தெளிவாகத் தெரியவில்லை. சவுதி தலைநகர் ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் (205 மைல்) தொலைவில் புக்கியாக் உள்ளது. புக்கியாக்கில் படமாக்கப்பட்ட ஆன்லைன் வீடியோக்களின் பின்னணியில் துப்பாக்கிச் சூடு  ஒலி கேட்கிறது. 

சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலையாகும். இங்கு ஒரு நாளைக்கு 7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் பதப்படுத்த முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலை கடந்த காலங்களில் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டது. அல்கொய்தா தற்கொலை படையினர்  பிப்ரவரி 2006-ல் எண்ணெய் வளாகத்தைத் தாக்க முயன்றனர், ஆனால் தோல்வியுற்றனர்.

Next Story