உலக செய்திகள்

போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான் + "||" + Once a war broke out, this nation will fight you till the last breath says imran khan

போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்

போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் -  இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
முசாபராபாத், 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக தோற்கடித்தது. 

இருப்பினும், காஷ்மீர் பிரச்சினையை எப்படியாவது பூதாகரமாக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டு வரும் இம்ரான் கான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் கூறியதாவது:-   காஷ்மீர் பிரச்சினை தற்போது சர்வதேச அளவில், முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்க, நாங்கள் தான் காரணம்.  நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது எதுவென்றால், நான் காஷ்மீரின் துாதுவராக உலகம் முழுவதும் செல்வேன்.

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து உலகுக்கு சொல்வேன். நாம் இப்போது பார்க்கும் இந்தியா, நேரு, காந்தி காலத்தில் இருந்த இந்தியா அல்ல. அடக்குமுறை காரணமாக, மக்களை பயங்கரவாதத்துக்கு துாண்டி வருகின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திருப்புவதற்காக பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து வருகிறார்கள் என்று இந்தியா சொல்லும் என்பது எனக்குத் தெரியும். 

எனினும், நாங்கள் இம்முறை அதை  அனுமதிக்கப்போவது இல்லை.  போர் வெடித்துவிட்டால் இறுதிமூச்சு வரை இந்த தேசம் போராடும். காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப்
இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
2. நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது : பாகிஸ்தான்
நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி
தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு, 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
4. இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில்
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.
5. இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.