உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது + "||" + People were loaded in trucks from Abbottabad and Rawalpindi Imran Khans PoK jalsa falls flat

காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது

காஷ்மீர் விவகாரம்:  இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது
காஷ்மீர் பிரச்சினையில் முசாபராபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பெரிய பேரணி தோல்வியில் முடிந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார்.
இஸ்லாமாபாத்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது சட்டபிரிவு  ரத்து செய்யப்பட்டதில் இருந்து  பாகிஸ்தானும் அதன் பிரதமரும் இந்தியாவுக்கு எதிராக பேசிவருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க பாகிஸ்தான்  முயன்றது. ஆனால் யாரும் ஆதரிக்கவில்லை.

சமீபத்தில், பாகிஸ்தானால் நடத்தப்பட 'காஷ்மீர் ஒற்றுமையின்  நேரம் ' பாகிஸ்தானியர்களிடையே செல்வாக்கில்லாமல் போய் விட்டது.  ஆகஸ்ட் 30 அன்று, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் சேர பள்ளி குழந்தைகளை அழைத்துவர  பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அது முடியவில்லை. ஆர்ப்பாட்டங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் போக்குவரத்தை தடைசெய்தனர் மற்றும் சாலைகளைத் தடுத்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் "தொடர்ச்சியான முற்றுகை" பற்றி உலகுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், "பாகிஸ்தான் காஷ்மீரிகளுடன் உறுதியுடன் நிற்கிறது என்பதை காஷ்மீரிகளுக்குக் காண்பிக்கவும்" இம்ரான் கான் புதன்கிழமை முசாபராபாத்தில் ஒரு மிகப்பெரிய  பேரணி நடத்தினார். இந்த பேரணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியும் கலந்து கொண்டார். 

பேரணியில் பேசிய இம்ரான்கான்  தனது இந்திய விரோதத்தை தூண்டும் வகையில் பேசினார்.

காஷ்மீர் மக்கள் பிராந்தியத்தில் மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட தீவிரவாதத்தை நோக்கி நகர்வார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் உயரும் என்று நான் இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறேன். கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள் போராடுவார்கள், ஏனென்றால் ஒரு இழிவான வாழ்க்கையை விட மரணம் சிறந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்" என்று  கூறினார். 

"பிக் ஜல்சா" என்கிற ஒரு மிகப்பெரிய  பேரணி  வெற்றி பெறவில்லை என  பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார். அவர்  கூறியதாவது:-

"முசாபராபாத்தில் இம்ரான் கானின் பேரணி ஒரு தோல்வியாக  முடிந்தது. மக்கள் பேரணிக்காக அபோதாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து லாரிகளில் ஏற்றி அழைத்து வரப்பட்டனர். மக்கள் பேரணியை முற்றிலுமாக புறக்கணித்தனர். இது குறித்து உலக மக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். 

பாகிஸ்தான் அதிகாரிகளால் கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலூசிஸ்தான் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெற்று வரும்போது காஷ்மீர் குறித்த தனது புனையப்பட்ட கதையை இம்ரான் கான் முன்வைப்பது முரணானது.

பாகிஸ்தான் மக்களிடையே பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து பாகிஸ்தான்  துப்பு துலக்கி வருகிறது.  முசாபராபாத்திற்கு  இம்ரான் கான் விஜயம் செய்ததன் உண்மையான நோக்கம் இதுதான் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல்: தலைமை நீதிபதி ஆவேசம்
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல் காரணமாக, தலைமை நீதிபதி ஆவேசமடைந்தார்.
2. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா
பாகிஸ்தானில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 78 பேரின் உயிரிழந்தனர்.
4. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்துள்ளது.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது.