உலக செய்திகள்

டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள் + "||" + Dinosaur-sized crocodile hangs out with brave tiny human

டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்

டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்
டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
ஒரு பெரிய முதலை தண்ணீரிலிருந்து வெளியே வந்து உங்களை நோக்கி வலம் வர ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பெரும்பாலானவர்கள் அந்த இடத்திலிருந்து முடிந்தவரை வேகமாக ஓடிவிடுவார்கள். 

ஆனால் இந்த மனிதன் அப்படி ஓடவில்லை... இந்த வீடியோ பழையதாக இருந்தாலும், இந்த வீடியோ சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்னர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பெரிய முதலைக்கு அருகில் ஒரு மனிதன் ஆபத்தான நிலையில் நிற்பதை அந்த வீடியோ காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், முதலை ஒன்று  நீரிலிருந்து வெளியே வந்து அவரது செல்லப்பிராணியாக வலம் வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து  முதலையின் உருவத்தை கண்டு வியந்து, அதை ஒரு டைனோசருடன் ஒப்பிட்டவர்கள் பலர். “ காட்ஜில்லாவைப் பாருங்கள்”, “இது ஒரு டைனோசர்” போன்ற கருத்துக்களை வெளியிட்டனர்.

வீடியோவில் உள்ளவர் மாட் ரைட். மான்ஸ்டர் க்ரோக் ரேங்லர் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ரைட்டின் மற்றொரு வீடியோ வைரலாகியது, அதில் அவர் முதலை வாய்க்குள்  இறங்கினார்.