இஸ்ரேலில் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே மோதல் - 40 பேர் படுகாயம்


இஸ்ரேலில் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே மோதல் - 40 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Sep 2019 10:00 PM GMT (Updated: 15 Sep 2019 9:28 PM GMT)

இஸ்ரேலின், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே நடந்த மோதலில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.


* ஆப்பிரிக்க நாடான கேமரூனின் வடமேற்கு பிராந்தியமான ஆங்லோபோன் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள அரசு தொலைதொடர்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரையும், அரசு பத்திரிகையின் நிருபர் ஒருவரையும் ஆயுதம் ஏந்திய கும்பல் நேற்று கடத்திச் சென்றது.

* இஸ்ரேலின் மேற்குகரை பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பிரான்சில் மீண்டும் மஞ்சள் அங்கி போராட்டம் தீவிரமடைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தலைநகர் பாரீசில் சுமார் 2 ஆயிரம் பேர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

* மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் கள் இல்லை.

* பாலஸ்தீன நாட்டில் சர்ச்சைக் குரிய காசா நகரின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை பாலஸ்தீன கிளர்ச்சிபடை சுட்டு வீழ்த்தியது.

Next Story