உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் - இந்தியாவுக்கு ஆதரவாக இங்கிலாந்து எம்.பி. பேச்சு + "||" + J&K part of sovereign India, Pak should leave PoK: UK MP Bob Blackman

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் - இந்தியாவுக்கு ஆதரவாக இங்கிலாந்து எம்.பி. பேச்சு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் - இந்தியாவுக்கு ஆதரவாக இங்கிலாந்து எம்.பி. பேச்சு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என இந்தியாவுக்கு ஆதரவாக இங்கிலாந்து எம்.பி. பேசி உள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வாழும் காஷ்மீர் பண்டிதர்கள் அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதில் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் கலந்துகொண்டு பேசியதாவது:-

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். காஷ்மீர் மாநிலத்தை இந்திய அரசியல்சாசனத்துடன் ஒன்றிணைக்க இதுவே சரியான தருணம். காஷ்மீர் மாநிலம் முழுவதுமே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு பகுதி தான்.


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே காஷ்மீரை இந்தியாவுடன் ஒன்றிணைக்க வசதியாக பாகிஸ்தான் ராணுவ படைகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு லண்டனில் உள்ள இந்திய தூதர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. “ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும்” - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும் என்று இந்தியா கண்டிப்புடன் கூறி உள்ளது.