தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு


தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு
x
தினத்தந்தி 16 Sep 2019 8:15 PM GMT (Updated: 16 Sep 2019 7:51 PM GMT)

தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் உயிரிழந்தது.

பாங்காக்,

தாய்லாந்து நகரம் பாங்காக்கின் மேற்கு பகுதியிலுள்ள காஞ்சனாபூரி என்ற இடத்தில் ஒரு புத்தர் கோவில் அமைந்துள்ளது. இதை புலிக்கோவில் என்று அழைப்பார்கள். அந்த கோவில் வன வளாகத்தில் நூற்றுக்கணக்கான புலிக்குட்டிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புலிகளோடு புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், அங்கு புலிகள் கடத்தப்படுவதாகவும், சுற்றுலா பயணிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புலிக்குட்டிகளை மருந்து பொருள் தயாரிப்பதற்கு விற்பதாகவும் வதந்திகள் பரவின. அதன் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் இருந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் பல புலிக்குட்டிகளின் சடலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கோவிலில் இருந்து 147 புலிகள் மீட்கப்பட்டன. அவைகளை அருகில் இருக்கும் ரட்சபுரி மாகாணத்தில் உள்ள 2 இனப்பெருக்க நிலையங்களுக்கு கொண்டு சென்று பராமரித்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட புலிகளில் 86 புலிகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டதாகவும், 61 புலிகள்தான் உயிர்பிழைத்து இருப்பதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story