உலக செய்திகள்

ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர் + "||" + India didn't ask for Zakir Naik: Malaysian PM says fortnight after meeting PM Modi

ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்

ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்
ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.
கோலாலம்பூர்,

ரஷ்யாவில் நடைபெற்ற  கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது,   மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக பேசப்பட்டதாக  கூறப்பட்டது.  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரும் இந்த செய்தியை கடந்த 5 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

ஆனால், உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது இந்த தகவலை மறுத்துள்ளார். பிரதமர் மகாதீர் முகமது கூறும் போது, “ ரஷ்யாவின் விளாடிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து  அவர் என்னிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.

சர்ச்சைக்குரிய வகையில் மலேசியாவில் பொதுமக்கள் மத்தியில் பேச ஜாகீர் நாயக் அனுமதிக்கப்படமாட்டார்.   ஜாகீர் நாயக் செல்லும் இடங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், ஆனால், அவரை எந்த நாடும் ஏற்கத் தயாராக இல்லை" எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்பரேட் வரியை குறைத்த இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐ.எம்.எப் ஆதரவு
கார்பரேட் வரியை குறைத்த இந்தியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியமான (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
2. இந்தியா - ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்தியா - ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்.
3. ‘ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கி இந்தியா செல்கிறது’ - மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு
ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கி இந்தியா செல்கிறது என மம்தா பானர்ஜி கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
4. சர்ச்சைக்குரிய பேச்சு: மன்னிப்பு கோரினார் ஜாகீர் நாயக்
சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய விவகாரத்தில் ஜாகீர் நாயக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
5. ஜாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த மலேசியா தடை
இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த மலேசியா தடை விதித்துள்ளது.