உலக செய்திகள்

கூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள் + "||" + Pakistanis looking for Vikram Lander on Google

கூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்

கூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்
கூகுளில் விக்ரம் லேண்டர் என்ற வார்த்தையை பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியர்களை போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் தேடியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7-ந் தேதி கூகுளில் “சந்திரயான்-2” “இஸ்ரோ” “விக்ரம் லேண்டர்” உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டதாக ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ தரவுகள் தெரிவிக்கின்றன.

அதில், இந்தியர்களை போல பாகிஸ்தான் மக்களும் “சந்திரயான்-2” “இஸ்ரோ” “விக்ரம் லேண்டர்” ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் அதிகம் தேடியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் விக்ரம் லேண்டரை பற்றி அறிந்து கொள்வதில் இந்தியர்களை விட பாகிஸ்தானியர்களே அதிகம் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததும் “இந்தியாபெயில்ஸ்” (இந்தியா தோற்றுவிட்டது) என்ற ஹேஸ்டேக் மூலம் டுவிட்டரில் இந்தியாவை பாகிஸ்தானியர்கள் கேலி செய்தனர்.

அதற்கு பதிலடியாக “வொர்த்லெஸ் பாகிஸ்தான்” (பயனற்ற பாகிஸ்தான்) என்ற ஹேஸ்டேக்கை இந்தியர்கள் உலக அளவில் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை
நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
2. விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை நாசா எடுத்தது
விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்த இடத்தை கண்டறிய தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியின் புதிய புகைப்படங்களை நாசா படம் பிடித்து உள்ளது.
3. சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் -நாசா
சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் என நாசா எடுத்த புகைப்படத்தை மையமாக கொண்டு உள்ளது.
4. விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: நாசா
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
5. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை : இஸ்ரோ சிவன்
விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என இஸ்ரோ சிவன் கூறி உள்ளார்.