உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு + "||" + Pakistan urges international community to take serious cognisance of Indias statement on PoK

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மீது இந்தியாவின் ஆக்கிரமிப்பு தோரணையை அறிந்து கொள்ள சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்

ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான  ராஜதந்திர உறவுகளை முறித்து  பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை வெளியேற்றியது.

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான்  தொடர்ந்து  முயற்சித்து வருகிறது, ஆனால் 370 வது சட்ட பிரிவை ரத்து செய்தது தங்களது உள் நாட்டு விஷயம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எங்கள் நிலைப்பாடு,  ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது எப்போதும் தெளிவாக இருக்கும், இது இந்தியாவின் ஒரு பகுதியாகும், ஒரு நாள் அதன் மீது எங்கள் அதிகார வரம்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

ஜெய்சங்கரின் அறிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மீது "இந்தியாவின் ஆக்கிரமிப்பு தோரணையை  அறிந்து கொள்ள" சர்வதேச நாடுகளுக்கு  அழைப்பு விடுத்துள்ளது.   

இந்தியாவில் இருந்து இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் போர்க்குணமிக்க அறிக்கைகள் பதட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்வதோடு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளன" என்று பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் மற்றும்   ஆக்கிரமிப்பு  காஷ்மீர் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறிய   பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், நிராகரிக்கிறோம். இந்த கருத்துக்கள் காஷ்மீரில் அதன் மோசமான மனித உரிமை மீறல்களை சர்வதேச அளவில் தணிக்கை செய்வதில் இந்தியாவின் முழு விரக்தியின் வெளிப்படையான வெளிப்பாடாகும்.

"காஷ்மீரின் அப்பாவி மக்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து இந்தியா சர்வதேச கவனத்தை திசை திருப்ப முடியாது. பாகிஸ்தான் சமாதானத்தை விரும்புகிறது. ஆனால் எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் திறம்பட பதிலளிக்க தயாராக இருக்கிறது. 

ஜிங்கோயிஸ்டிக் சொல்லாட்சியை நாடுவதற்குப் பதிலாக, இந்தியா தனது சட்டவிரோத நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டத்தை மீறுவதைத் தவிர்க்க வேண்டும், ஜம்மு-காஷ்மீர் தகராறின் இறுதித் தீர்வுக்கான ஐ.நா.பாதுகாப்பு தீர்மானங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என கூறி  உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவுக்கு பலி
பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகினர்.
2. பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
3. பாகிஸ்தானில் பயங்கரம்: 100 பேருடன் பறந்த விமானம் விபத்தில் சிக்கியது
பாகிஸ்தானில் 100 பேருடன் பறந்த விமானம் விபத்துக்குள்ளானது. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
4. பாகிஸ்தான் விமான விபத்தில் 99 பயணிகள் உள்பட 107 பேர் பலி
கராச்சி விமான நிலையத்தில் இறங்க முயன்ற பாகிஸ்தான் விமானம் விபத்தில் சிக்கி 99 பயணிகள் உள்பட 107 பேர் பலியானார்கள்.
5. பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே விமானம் விழுந்து விபத்து
பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.