இந்தியாவின் நிலவு விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா சர்வதேச விண்வெளி வீரரிடம் விசாரித்த ஹாலிவுட் நடிகர்


இந்தியாவின் நிலவு விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா சர்வதேச விண்வெளி வீரரிடம் விசாரித்த ஹாலிவுட் நடிகர்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:09 AM GMT (Updated: 18 Sep 2019 11:09 AM GMT)

இந்தியாவின் நிலவு விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா என சர்வதேச விண்வெளி வீரரிடம் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விசாரித்தார்.

வாஷிங்டன்

ஹாலிவுட் மெகா ஸ்டார் பிராட் பிட் தற்போது தனது வரவிருக்கும் விண்வெளி  திரைப்படமான ஆட் அஸ்ட்ராவுக்கான விளம்பரங்களை செய்து வருகிறார், மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன்  உரையாடினார்.  இந்த உரையாடலில் இந்தியாவின் விக்ரம் லேண்டர்  குறித்து பேசினார்கள்.

சர்வதேச விண்வெளியில் உள்ள வாழ்க்கையைப் பற்றி பேசினார். பின்னர் சந்திரயான் -2 இன் ஒரு பகுதியாக இருந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கியது குறித்து காண முடிந்ததா என்று விசாரித்தார்.

பிட் கேட்டதாவது:-

"நான் கடந்த வாரம் ஜேபிஎல் (ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்திற்கு) செல்ல வேண்டியிருந்தது, அது இந்தியா சந்திரனில் தரையிறங்கும் நாளில்தான், அந்த முயற்சியில் அமெரிக்கா அவர்களுக்கு உதவியது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதைப் பார்க்க முடியுமா? ”

இதற்கு பதிலளித்த  ஹேக் "இல்லை, துரதிர்ஷ்டவசமாக, நானும் மற்ற குழுவினரும் செய்தி அறிக்கைகளைதான் பார்க்க  வேண்டியிருந்தது" என்று பதிலளித்தார்.

இந்த உரையாடல்கள்  நாசா டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

இரண்டு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஒரு இத்தாலியருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஹேக் இருக்கிறார்.


Next Story