உலக செய்திகள்

இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான் + "||" + Pakistan PM Imran Khan says ‘no chance’ of bilateral talks with India

இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான்

இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான்
இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370- ரத்து செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இவ்விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்துச்சென்றது. எனினும், எந்த ஆதரவும் கிட்டாமல் விரக்தியில் உள்ள பாகிஸ்தான் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகிறது. 

இதற்கிடையில்,  காஷ்மீரில் அமைதி நிலவ  இந்தியா- பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பே இல்லை என கூறி உள்ளார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில்  ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் டி20 கிரிக்கெட் ; நியூசிலாந்துக்கு 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு இந்திய அணி 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
2. இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து
இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
3. இரு நாடுகளுக்கிடையே ஐந்து பிரிவுகளில் பேச்சுவார்த்தை ; சிஏஏ இடம்பெறவில்லை -வெளியுறவு செயலாளர்
இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையே ஐந்து முக்கிய பிரிவுகளில் பேச்சுவார்த்தை நடந்தன, குடியுரிமை திருத்த சட்டம் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
4. இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம்: ஆமதாபாத் நிகழ்ச்சியில் டிரம்ப் அறிவிப்பு
ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஆமதாபாத் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.