உலக செய்திகள்

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு + "||" + American Army band playing Indian National Anthem during the Exercise Yudh Abhyas 2019

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு
இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி தளத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் லூயிஸ் மெக்கார்ட் என்ற இடத்தில், யுத் அபியாஸ் பயிற்சி 2019 என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அடிப்படையில் இந்த பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.  அவர்கள், இந்தியாவின் பிரபல பட்லுராம் கா படான் என்ற பாடலுக்கு இணைந்து பாடியபடியும், நடனம் ஆடியும் வெளியான வீடியோ கடந்த வாரம் வைரலானது.  இந்த கூட்டு பயிற்சி நேற்றுடன் முடிவடைந்தது.

இதனிடையே, இந்திய ராணுவ வீரர்களுக்காக அமெரிக்க ராணுவ இசைக்குழுவை சேர்ந்தவர்கள் இந்திய தேசிய கீதத்தினை இசைத்தனர்.  இந்த பயிற்சியின் முடிவில், இருதரப்பு நலன்களுக்காக, தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பல்வேறு தலைப்புகளில் பகிர்ந்து கொள்ளும் ஆலோசனை கூட்டங்களை இரு நாடுகளின் நிபுணர்கள் நடத்துவார்கள்.