உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு + "||" + Terrorists in India not coming from moon European Union Parliament on Pakistan

இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு

இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
பெல்ஜியம்

கடந்த ஆகஸ்ட்  5 ந்தேதி  இந்தியா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்தது. மேலும்  சீனாவுடன் சர்ச்சைக்குரிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது. இதனால் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் செல்வதில் சீனா  பாகிஸ்தானை ஆதரித்தது . ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரித்தன.

இந்தியாவுக்கு  மற்றொரு ராஜதந்திர வெற்றி கிடைத்து உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து, பாகிஸ்தானை ஒரு "தெளிவற்ற" நாடு என்று கூறி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், இத்தாலியில் உள்ள ஐரோப்பிய மக்கள் கட்சியின் (கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள்) உறுப்பினருமான ஃபுல்வியோ மார்டூசியெல்லோ கூறியதாவது:-

இந்தியா "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு " பல ஆண்டுகளாக நாடு எதிர்கொண்ட பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கையை  கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட பயங்கரவாதிகளால் முடிந்தது என கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மற்றொரு உறுப்பினரும், போலந்தில் உள்ள ஐரோப்பிய கன்சர்வேடிவ்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவின் உறுப்பினருமான ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கி கூறும் போது, 

"இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு.  இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் நடந்த பயங்கரவாத செயல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்த பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை. அவர்கள் அண்டை நாட்டிலிருந்து வருகிறார்கள். நாம் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு: சவுதி அரேபியா ஏற்பாடு
காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாட்டுக்கு சவுதி அரேபியா ஏற்பாடு செய்துள்ளது.
2. காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சீனா திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது
ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது. இதனை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்து உள்ளார்.