உலக செய்திகள்

"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்: டிரம்ப் சூசகம் + "||" + Trump hints at some announcement at 'Howdy, Modi' event in housten

"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்: டிரம்ப் சூசகம்

"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்: டிரம்ப் சூசகம்
"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், 

அரசு முறைப்பயணமாக வரும் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த சுற்றுப்பயனத்தின் போது டெக்சாஸின் ஹூஸ்டன் நகரில், இந்திய வம்சாவளியினர்  கலந்து கொள்ளும் 'ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில்  உரையாற்றுகிறார்.  22 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வில் 50,000 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்திய-அமெரிக்கா இடையிலான வலிமையான நட்புறவை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பு அழைப்பளராக அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கவுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாடு, ஆகஸ்ட் மாதத்தில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்குப் பிறகு இரண்டு தலைவர்களும் பங்கேற்றும் மூன்றாவது நிகழ்வாக இந்த சந்திப்பு அமையவுள்ளது. 

இதற்கிடையில்,  கலிபோர்னியாவிலிருந்து வாஷிங்டன் நகருக்குத் திரும்பும் வழியில் விமானப் படைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கும்போது ஏதேனும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதா? என டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு  பதிலளித்த டிரம்ப்,  “அறிவிப்புகள் வெளியாகலாம். பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். அவருக்கும் எனக்கும் நல்ல நட்புறவு உள்ளது”
என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு
கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
2. எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா
எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
3. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை எனவும் பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
4. ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை
ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. துருக்கி மீதான பொருளாதார தடை நீக்கம் - டிரம்ப் அறிவிப்பு
துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.