உலக செய்திகள்

அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம் + "||" + The lion entered the open house in United States

அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்

அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்
அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் சிங்கம் ஒன்று புகுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சோனாரா நகரை சேர்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி. இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீட்டின் முன்கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்குள் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர்.


அப்போது, வீட்டினுள் வினோதமான சத்தம் கேட்பதை இருவரும் உணர்ந்தனர். அதனைத் தொடர்ந்து சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை தேடி போனார்கள். அப்போது கண்ட காட்சி அவர்களை பயத்தில் உறையவைத்தது.

அவர்களது வீட்டுக்குள் சிங்கம் ஒன்று சகஜமாக உலாவிக்கொண்டிருந்தது. அதை கண்டதும் இருவரும் பயத்தில் அலறினர். இதை கேட்டு பதறிய மலை சிங்கம் வீட்டின் கழிவறைக்குள் ஓடிவிட்டது.

உடனே அந்த தம்பதி சாதுரியமாக செயல்பட்டு கழிவறையின் கதவை இழுத்து மூடினர். பின்னர் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் கழிவறைக்குள் படுத்துக்கிடந்த சிங்கத்தை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அதனை கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
2. அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.