உலக செய்திகள்

தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது + "||" + Trump to deploy more troops to Saudi Arabia after attack

தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது

தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது
ஆரம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
வாஷிங்டன்,

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமாக புக்யாக்கில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் எண்ணெய் வயல் மீதும் கடந்த 14-ந்தேதி அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்கள் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றபோதும், தாக்குதலின் பின்னால் இருந்தது ஈரான் என அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.


இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்காவோ, சவுதி அரேபியாவோ தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா கூடுதல் படையினரை அனுப்பி வைக்கிறது.

இதை அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் வாஷிங்டன் பென்டகனில் நிருபர்களிடம் பேசுகையில், “வான்தாக்குதலையும், ஏவுகணை தாக்குதல்களையும் தடுக்கிற வகையில் தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்க படையினர், சவுதிக்கு அனுப்பப்படுகின்றனர்” என கூறினார்.

ஆனால் அங்கு செல்லக்கூடிய படை வீரர்களின் எண்ணிக்கை பற்றியோ, எப்போது அவர்கள் அங்கு செல்வார்கள் என்பது பற்றியோ கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்
கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
2. பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக சவுதி அரேபியா அடையாளப்படுத்துகிறது
பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக அடையாளப்படுத்தும் வீடியோவை சவுதி அரேபியா வெளியிட்டு உள்ளது.
3. கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு
கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
4. எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா
எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
5. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை எனவும் பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.