உலக செய்திகள்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது: டொனால்டு டிரம்ப் + "||" + China Is A Threat To The World, Building Military Rapidly": Donald Trump

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது: டொனால்டு டிரம்ப்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது:  டொனால்டு டிரம்ப்
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், 

தென் சீனக்கடல் பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதற்கு மத்தியில் சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 152 பில்லியன் டாலர் வரை சீனா ராணுவத்திற்கு செலவு செய்ய முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசனுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-  பிற எந்த நாடுகளை விடவும் வேகமாக ராணுவ பலத்தை சீனா பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, வெளிப்படையாகவே சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. உண்மையில் அவர்கள் அமெரிக்காவின் பணத்தையே பயன்படுத்தியுள்ளனர். 

நமது அறிவுசார் சொத்துக்களையும் சொத்து உரிமையையும் சீனா திருடி வருகிறது. எனக்கு முந்தைய அதிபர்கள் இதற்கு அனுமதித்தனர். ஆனால், நான் அவ்வாறு அனுமதிக்கப் போவது இல்லை.

அமெரிக்க அதிபர்கள் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்களைச் சீனா கொண்டு செல்வதை அனுமதித்தனர். சீனா நம் அறிவுசார் சொத்துரிமையை அபகரிப்பதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். நான் அப்படியல்ல. சீனாவுடன் நெருக்கமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால்,  சீனா இறுதியில் ஒப்புக்கொள்ள மறுத்தது. இதனால், நான் உங்கள் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை விதிக்கப்போகிறேன் என்று கூறினேன். அதன்படியே வரி அதிகரிக்கப்பட்டது. இது மேலும் கூடும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது.
2. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
3. இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்கா தயார் - டொனால்டு டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்கா தயார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா
டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கலந்து கொள்கிறார்.
5. சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது
சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமர் மோடி பேசி வருகிறார்.