ஈராக்கின் வடக்கு பகுதியில் துருக்கி நடத்திய வான்தாக்குதலில் 5 பேர் பலி


ஈராக்கின் வடக்கு பகுதியில் துருக்கி நடத்திய வான்தாக்குதலில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 21 Sep 2019 10:41 PM GMT (Updated: 21 Sep 2019 10:41 PM GMT)

ஈராக்கின் வடக்கு பகுதியில் துருக்கி நடத்திய வான்தாக்குதலில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


* அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் போடத் தேவையில்லை என்றும், அதன்பின்னரும் முழுமையான ஒப்பந்தம்தான் போடப்படவேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி கூறி உள்ளார்.

* ‘டபாஹ்’ புயல் அச்சுறுத்தலால் ஜப்பானின் தெற்கு, தென்மேற்கு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தாகி உள்ளன. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சார வினியோகம் இன்றி இருளில் மூழ்கி உள்ளன. அங்கு மணிக்கு 78 மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

* ஈராக்கின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி நடத்திய வான்தாக்குதலில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே மிடில்டன் தம்பதியர், பாகிஸ்தானில் அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் 18-ந்தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

* அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story