உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு + "||" + 6.4-magnitude quake strikes off eastern Indonesia, not potential for tsunami

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இன்று அதிகாலை 2.53 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

இதுபற்றி வானிலை மற்றும் புவி இயற்பியல் ஆய்வு மைய அதிகாரி முகமது படிலா கூறும்பொழுது, மலுகு தெங்கரா பராத் மாவட்டத்தில் இருந்து 165 கி.மீ. தொலைவில் கடற்படுகைக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை.  அதனால் சுனாமி எச்சரிக்கையை நாங்கள் பிறப்பிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
நிக்கோபார் தீவில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பச்சிளம்குழந்தை உள்பட 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ மாகாணத்தில் உள்ள மகிலாலா நகரில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
3. பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. அரூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி
அரூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பலத்த சத்தத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.