உலக செய்திகள்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு + "||" + American Indians are hardworking people - Trump praises

அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு

அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு
அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டினார்.
ஹூஸ்டன்,

ஹூஸ்டன் நகரில் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில் கூறியதாவது:-

மோடி சமீபத்தில் தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். மோடியுடன் இருப்பதை நான் பெருமையாக கருது கிறேன். எனது அருமை நண்பர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்திய மக்களுக்கு சிறப்பான பணியை மோடி செய்து வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. இந்திய மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறார். அடுத்த கட்டத்துக்கு இந்திய மக்களை மோடி அழைத்துச்செல்கிறார்.

ஜனநாயகத்தின் மீது இருநாடுகளும் நம்பிக்கை வைத்து உள்ளது. 60 கோடி மக்கள் பங்கேற்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார். இந்திய மக்கள் ஒருமனதாக மோடியை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் ஆவார்கள். அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மையை குறைத்து இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்கி இருக்கிறோம். 1 கோடியே 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து இருக்கிறோம். அமெரிக்கவாழ் 50 ஆயிரம் இந்திய மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. மோடியின் ஆட்சி காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலோங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.