பருவநிலை மாநாட்டை தவிர்த்தபோதும் மோடியின் உரையை கேட்பதற்காக ஐ.நா.வுக்கு வந்த டிரம்ப்


பருவநிலை மாநாட்டை தவிர்த்தபோதும் மோடியின் உரையை கேட்பதற்காக ஐ.நா.வுக்கு வந்த டிரம்ப்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:30 PM GMT (Updated: 23 Sep 2019 10:30 PM GMT)

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக பருவநிலை மாற்ற மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார்.

நியூயார்க், 

புவி வெப்பமயமாதலுக்கு மனித தவறே காரணம் என்ற அறிவியல் கருத்தில் தொடர்ந்து சந்தேகம் வெளியிட்டு வரும் அவர், இதற்கு பதிலாக மத சுதந்திர கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த அரங்குக்குள் டிரம்ப் நுழைந்தார். பின்னர் அங்கேயே அமர்ந்திருந்த அவர் மோடியின் உரையை உன்னிப்பாக கவனித்தார். சுமார் 10 நிமிடங்கள் மோடியின் உரையை கேட்டுவிட்டு அங்கிருந்து டிரம்ப் புறப்பட்டு சென்றார்.

டிரம்பின் திட்டமிடப்படாத இந்த வருகை மாநாட்டில் கலந்து கொண்ட பிற தலைவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Next Story