பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது -இங்கிலாந்து உச்சநீதிமன்றம்


பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது -இங்கிலாந்து உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 24 Sep 2019 10:55 AM GMT (Updated: 24 Sep 2019 10:55 AM GMT)

பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

லண்டன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஒரு பெரிய அடியாக, இங்கிலாந்து  உச்சநீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்தது. நாட்டின் பிரெக்ஸிட்  காலக்கெடு நேரத்தில் பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநீக்கம் செய்ய இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன்  எடுத்த முடிவு  சட்டவிரோதமானது என இங்கிலாந்தின்  உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்து உள்ளது.

ஒருமனதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடாளுமன்றத்தை இடைநிறுத்த உத்தரவை செல்லாது என அறிவித்தது. இதனால் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு திரும்புவதற்கு இந்த தீர்ப்பு வழி வகிக்கிறது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத் தலைவர் பிரெண்டா ஹேல் கூறும்போது, இந்த  இடைநீக்கம் சட்டவிரோதமானது, ஏனெனில் பாராளுமன்றம் அதன்  அரசியலமைப்பு செயல்பாடுகளை நியாயமான நடைமுறைகளை  நிறைவேற்றுவதற்கான திறனை தடுக்கும் விளைவைக் கொண்டிருந்தது.

பாராளுமன்றம் ஒருபோதும் சட்டப்பூர்வமாக இடைநிறுத்தப்படவில்லை, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் தொடர்ந்து செயல்படுகிறது என்று கூறினார்.

Next Story