நைஜீரியா நாட்டில் மத பள்ளியில் 500 கொத்தடிமைகள் மீட்பு


நைஜீரியா நாட்டில் மத பள்ளியில் 500 கொத்தடிமைகள் மீட்பு
x
தினத்தந்தி 29 Sep 2019 7:30 PM GMT (Updated: 29 Sep 2019 7:17 PM GMT)

நைஜீரியா நாட்டில் மத பள்ளியில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 500 பேர் மீட்கப்பட்டனர்.

அபுஜா,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தின் தலைநகர் கடுனாவில் மத பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 5 வயது சிறுவர்கள் முதல் 20 வயது இளைஞர்கள் வரை சுமார் 500 ஆண்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்துபோயினர்.

அவர்களில் பலரது கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. சிலரது முதுகில் கசையடிகளின் தழும்புகள் காணப்பட்டன. மேலும் அவர்கள் அனைவரும் பட்டினி போடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 500 பேரையும் போலீசார் மீட்டனர். அனைவரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story