உலக செய்திகள்

எந்த சக்தியாலும் எங்கள் நாட்டை அசைத்து பார்க்க முடியாது - சீன அதிபர் ஜி ஜின்பிங் + "||" + "No Force" Can Shake This Nation, Says Xi Jinping As China Marks 70 Years

எந்த சக்தியாலும் எங்கள் நாட்டை அசைத்து பார்க்க முடியாது - சீன அதிபர் ஜி ஜின்பிங்

எந்த சக்தியாலும் எங்கள் நாட்டை அசைத்து பார்க்க முடியாது -  சீன அதிபர் ஜி ஜின்பிங்
எந்த சக்தியாலும் எங்கள் நாட்டை அசைத்து பார்க்க முடியாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
பெய்ஜிங், 

சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினம், பிரமாண்ட ராணுவ அணிவகுப்புடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சீனாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 70-வது ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தியானன்மென் சதுக்கத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை நேரில் காண, சுமார் ஒரு லட்சம் மக்கள் சீனக்கொடிகளுடன் திரண்டிருந்தனர். விழா தொடங்கியதும், 70 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 5 நட்சத்திரத்துடன் கூடிய செந்நிற சீன கொடி, கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு, சீன கீதம் பாடப்பட்டது.

 தேசிய தினத்தை முன்னிட்டு, தனது நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் விதமாக ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  இவற்றை திறந்த வாகனத்தில் நின்றபடி  பார்வையிட்ட பின் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ”உலகின் எந்த சக்தியாலும் இந்த நாட்டை  அசைத்து பார்க்க முடியாது” என்றார்.

சீன புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, சீனா, ரஷியா சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு
இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
2. சீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன்?
சீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன்? என ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
3. இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா விருப்பம்
இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
4. இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப்
இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
5. சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் -ஜி ஜின்பிங் எச்சரிக்கை
சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.