உலக செய்திகள்

நியூசிலாந்தில் பரபரப்பு: ‘ஷூ’ கடையில் 9 மணி நேரம் ஒளிபரப்பான ஆபாச படம் + "||" + Sensation in New Zealand: 9 hours aired porn video at shoe store

நியூசிலாந்தில் பரபரப்பு: ‘ஷூ’ கடையில் 9 மணி நேரம் ஒளிபரப்பான ஆபாச படம்

நியூசிலாந்தில் பரபரப்பு: ‘ஷூ’ கடையில் 9 மணி நேரம் ஒளிபரப்பான ஆபாச படம்
நியூசிலாந்தில் ‘ஷூ’ கடை ஒன்றில் 9 மணி நேரம் ஆபாச படம் ஒளிபரப்பானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வெல்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் பிரபல விளையாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஷூ’ கடை உள்ளது. இந்த கடையின் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான திரையில் விளையாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வகையில் தினமும் வீடியோக்கள் ஒளிபரப்பப்படும். கடை மூடப்பட்ட பிறகும் இரவு முழுவதும் விளம்பர படங்கள் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கும்.


இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ‘ஷூ’ கடையின் வெளியே உள்ள திரையில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகின. இது அந்த வழியாக நடந்து சென்றவர்களை முகம் சுளிக்க செய்ததது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு சிலர், ‘ஷூ’ கடையின் நிர்வாகத்தை திட்டியவாறே கடந்து சென்றனர். அதே சமயம் வேறு சிலர் பொறுமையாக நின்று ஆபாச காட்சிகளை கண்டு ரசித்து சென்றனர். சுமார் 9 மணி நேரம் திரையில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகின. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கடையின் ஊழியர் வந்து, கடையை திறந்து ஒளிபரப்பை நிறுத்தினார். இது எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை என்றும், இது குறித்து விசாரிப்பதாகவும் கூறியிருக்கும் விளையாட்டு நிறுவனம் இந்த சம்பவத்துக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்
நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
2. நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
நியூசிலாந்தில் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
3. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
4. ‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்டில் சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.