பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என பலருக்கு கவலைகள் உள்ளன- அமெரிக்கா


பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என பலருக்கு கவலைகள் உள்ளன- அமெரிக்கா
x
தினத்தந்தி 2 Oct 2019 8:12 AM GMT (Updated: 2 Oct 2019 8:12 AM GMT)

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என பலருக்கு கவலைகள் உள்ளன என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

ஜம்மு-காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று இந்தியாவிற்கு  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ராண்டால் ஸ்ரீவர் கூறியதாவது:-

காஷ்மீர் முடிவுகளின் விளைவாக எல்லை தாண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய பயங்கரவாத குழுக்களை மீது பாகிஸ்தான் மறைத்து  வைத்திருப்பதாக பலருக்கு கவலைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். சீனா அந்த வகையான மோதலை விரும்புகிறது அல்லது அதை ஆதரிக்கும் என்று நான் எண்ணவில்லை. பெரும்பாலும் ராஜதந்திர மற்றும் அரசியல் ஆதரவுதான் என்று நான் நினைக்கிறேன் (காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு சீனா அளிக்கும் ஆதரவு) .

அவர்கள் (சீனா) சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ளனர். காஷ்மீர் எடுத்துக் கொள்ளப்படுமா? இல்லையா? என்பது குறித்து ஐ.நா.வில் சில விவாதங்கள் உள்ளன. சீனா அதை ஆதரிக்கும். ஆனால் அதையும் மீறி வேறு ஒன்றையும் நான் செயலில் பார்க்கவில்லை.

சீனா பாகிஸ்தானுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. மேலும் அவர்கள் இந்தியாவுடன் வளர்ந்து வரும் போட்டியைக் கொண்டுள்ளனர். மேலும் சீனாவுடன் இந்தியா ஒரு நிலையான உறவை நாடுகிறது.

காஷ்மீரை உள்ளடக்குவதற்கான பல விஷயங்களில், சீனா பாகிஸ்தானை நோக்கி சாய்ந்துள்ளது என்று  நான் நினைக்கிறேன் என கூறினார்.

Next Story